"தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வுத் துறை
இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 8 வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 10 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அப்பகுதிகளுக்கு ஜூலை 8 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Comments